Latestவாழ்க்கை

எட்டாத 8 இரகசியங்கள்: தெரிந்து கொண்டால் வெற்றி தரும்!

சென்னை, ஜன.19- இந்தியாவை ஆண்ட மன்னர்களில் மிகவும் முக்கியமானவர் சந்திர குப்த மௌரியர். அவரை மன்னராக ஆக்கியதும் அவரின் ராஜ்யம் வளமாய் இருக்கவும் காரணமாக இருந்தவர் அவரின் தலைமை அமைச்சர் சாணக்கியர் என்பவர்.

சந்திர குப்தருக்கு மட்டுமின்றி சாணக்கியரின்  அறிவுரைகள் அனைத்து மக்களுக்கு பொதுவானதாகும்.வாழ்க்கையில் அனைத்து தருணங்களிலும் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று சாணக்கியர் தன் நூல்களில் கூறியுள்ளார்.

ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்று கூறியுள்ள சாணக்கியர், என்ன செய்யக்கூடாது என்பதையும் தெளிவாக கூறியுள்ளார்.

1. நிதிப்பிரச்சனை எப்போதும் கட்டுபாட்டின் அடையாளமாகும். எனவே உங்கள் பணம் தொடர்பான பிரச்சினை தேவையில்லாத சூழ்நிலையில் ஒரு போதும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

2. குரு மந்திரங்களை அல்லது குரு கூறிய அறிவுரைகளை ஒரு போதும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள். தன்மை வாய்ந்த மந்திரங்கள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

3. உங்கள் குடும்ப சண்டைகளை பொதுவெளியில் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்களுக்கு பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தும்.

4. ஞானமுள்ள மனிதன் எப்போதும் தான் செய்த தானத்தையோ- நன்கொடையையோ வெளியே கூற மாட்டார்கள். அப்படிபட்டவர்கள் கடவுளால்
மதிக்கப்படுவார்கள். ஆனால் தற்பெருமைக்காக இதனை செய்யக்கூடாது.

5. உங்கள் வயதிற்கும் திறைமைக்கும் முயற்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. எனவே யாரும் கேட்காத வரை உங்கள் வயதை வெளிப்படுத்த வேண்டாம்.

6. உங்களின் பாலியல் வாழ்க்கை என்பது உங்களின் தனிப்பட்ட விஷயமாகும். அதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள எந்த அவசியமும் உரிமையும் இல்லை. உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி வெளிப்படையாக மற்றவர்களிடம் கூறுவது அற்பமானது.

7. நீங்கள் சமூகத்திலோ அல்லது அலுவலகத்திலோ பெரிய பொறுப்பில் இருந்தால் அதிகார போதை தலைக்கேறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களை தலைக்கீழாக கவிழ்க்க அது ஏற்புடையதாய் அமைந்து விடும்.

8. உங்களின் முட்டாள் தனத்தை எண்ணி எப்போதாவது நீங்களே சிரித்திருப்பீர்கள். அதனை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள். அடுத்தவர்களிடம் சொல்லும் போது தான் அவமானம் ஏற்படும். இந்த எட்டில்தான் இருக்கிறது வெற்றி இரகசியங்கள்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker