Latestமலேசியா

கும்பலிடம் சிக்கித் தவித்த 13 வியட்னாம் பெண்கள் மீட்பு

பத்து பகாட், ஜன.19 – யோங் பெங் நகரிலுள்ள கேளிக்கை மையத்தில் போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு 13 வியட்னாமிய பெண்களை மீட்டனர். இவர்கள் ஆள்கடத்தல் கும்பல் ஒன்றிடம் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த நிலையில் மீட்கப் பட்டார்கள்.

புக்கிட் அமான் ஆள்கடத்தல் தடுப்ப் பிரிவினர் மற்றும் பத்து பகாட் மாவட்ட போலீஸ் தலைமையக அதிகாரிகள் ஆகியோர் இரவு 1.30 மணியளவில் இந்தச் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர் என்று பத்து பகாட் போலீஸ் படைத் தலைவர் ஏ.சி.பி அஷான் அப்துல் ஹாலிம் தெரிவித்தார்.

இவர்களுடன் சேர்த்து மேலும் 30 பேரை போலீசார் கைது செய்தனர். மீட்கப்பட்ட வியட்னாமிய பெண்கள் 19 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட இதர் 30 பேரில், போதைப் பொருள் உட்கொண்டிருந்ததாக நம்பப்படும் 24 பேரும் அடங்குவர். இவர்களில் இரு போலீஸ்காரர்களும் உள்ளனர். இதர நால்வர், ஆள் கடத்தலில் ஈடுபட்டதாகவும் மேலும் இருவர் போதைப் பொருள் வினியோகத்தில் ஈடுபட்டவர்கள் என்றும் தெரிய வந்தது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker