Latestசினிமா

“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா?’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்

மும்பை, ஜன.19- பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை வலைத்தளவாசிகள் விளாசித் தள்ளுகிறார்கள். பாலிவுட் நடிகையும் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா, ‘பான் மசாலா’ பாக்கு விளம்பரத்தில் நடித்துள்ளார்.

அந்த விளம்பர வீடியோவை அனுஷ்கா சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த மக்கள் அனுஷ்காவை விளாசி வருகின்றனர்.

ரஜ்னிகந்தா என்கிற பான் மசாலா விளம்பரத்தில் நடித்த வீடியோவை அனுஷ்கா வெளியிட்டார். அதை பார்த்த வேகத்தில் வலைத்தளவாசிகள் அவர் மீது கோபம் அடைந்து விட்டனர்.

“நீங்கள் ரஜ்னிகந்தா பிராண்டை விளம்பரம் செய்தால் உங்களின் ரசிகர்களுக்கு வாயில் புற்று நோய் ஏற்படும் அபாயம் வரும். ஆண்டுக்கு 1 லட்சம் பேர் இறப்பதை விட கோடிக்கணக்கில் பணம் தான் முக்கியமா? என்று அவர்கள் அனுஷ்காவிடம் கேட்டுள்ளார்.

‘தீங்கு விளைவிக்கும் எதையும் நான் விற்க மாட்டேன்’ என்கிறார் கணவர் கோஹ்லி. மனைவியோ பான் மசாலா பாக்கு விற்கிறார் என்று மக்கள்சாடியுள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker