Latestமலேசியா

தமிழ்ப் பேசும் ஒருவரே அதிபராக வரவேண்டும் ! – இலங்கை எம்.பி.

கொழும்பு, ஜன. 20- சிறுபான்மை இனத்தவர்களான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பேசும் தமிழ்ப் மொழி தொடர்பில் தெளிவுப் பெற்ற ஒருவரே அதிபராக வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமா தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர்,  தற்போது நாட்டில் காணப்படுகின்ற சூழ்நிலையில் அதிபர் தேர்தலே நடைபெற வேண்டும்.

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு அதிபர் எடுத்த தீர்மானம் சட்ட விரோதமானது என நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. அதன் காரணமாக அதிபர் தேர்தலை நடத்துவதற்கு அதிபர் மைத்திரி பால சிறிசேன நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடுத்து தமிழ் பேசத்தெரிந்த ஒருவரே நாட்டின் அதிபராக வேண்டும். சிறுபான்மை மக்களான தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள தமிழ்ப் பேச தெரிந்தவரால் மட்டுமே முடியும். இவ்வாறு குமார வெல்கமா தெரிவித்து உள்ளார்.

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேயின் நெருங்கிய நண்பராவார் குமார வெல்கமா. மேலும் தமிழில் சரளமாக பேசக் கூடியவர் மகிந்த ராஜபக்சே என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker