Latestமலேசியா

நியூ யோர்க்: இனவாத தாக்குதலில் மலேசியர் உயிரிழந்தார்!

கோலாலம்பூர்,ஜன.21- அமெரிக்கா, நியூ யோர்க்கில் நடந்த ஓர் கொகோர இனவாத தாக்குதலில் மலேசியர் ஒருவர் உயிரிழந்தார்.

அத்தாக்குதலில் கடுமையான காயங்களுக்கு இலக்கானதால் இங் தான் கியோங் என்ற அந்த மலேசியர் நியூ யோர்க்கில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமையன்று மாலை 4 மணி அளவில் உயிரிழந்ததாக விஸ்மா புத்ரா உறுதிப்படுத்தியுள்ளது.

இங் தான் கியோங்கின் உடலை தாயகத்திற்கு கொண்டு வரும் ஏற்பாடுகளைச் செய்வதற்காக அவரது குடும்பத்தாரை தொடர்பு கொண்டு விட்டதாகவும் விஸ்மா புத்ரா தெரிவித்தது.

60 வயது இங், புருக்லின், எம்மோன்ஸ் எவெனியூவில் ஓர் உணவகம் வைத்துள்ளார். சம்பவ நாளன்று, இங் தனது இரு பணியாளர்களுடன் உணவகத்தில் இருந்திருக்கிறார். வாடிக்கையாளர்கள் நிறைய பேர் இருந்த நிலையில் அன்று உணவகம் பரபரப்பாக இருந்திருக்கிறது.

அச்சமயத்தில் உணவகத்தில் திடீரென சுத்தியலுடன் புகுந்த ஓர் ஆடவன் இங்கையும் அவரது பணியாளர்களையும் சரமாரியாக சுத்தியலைக் கொண்டு தலையிலேயே தாக்கி இருக்கிறான்.

தாக்குதல் நடந்து சிறிது நேரத்திலேயே அர்தூர் மார்துவோனிக் என்ற அந்த 34 வயது தாக்குதல்காரனை போலீசார் கைது செய்துள்ளனர். சீன திரைப்படம் ஒன்றில், ஆண்கள் பெண்களை தவறாக நடத்தியதைப் பார்த்ததால், தான் இந்த தாக்குதலை மேற்கொண்டதாக மார்துவோனிக் விசாரணையின் போது கூறி இருக்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker