Latestஉலகம்

அதிகமாக ‘டுரியான்’ தின்றவர் மரணம்! இரத்த நாளங்கள் வெடித்தன!

ஜகார்த்தா, ஜன.22- இங்கு தங்கேராங் பகுதியில் உள்ள சுரூக் என்ற இடத்தில், பொது மினி வேன் ஓட்டுநர் ஒருவர் இறந்துக் கிடந்தார். அதிகமாக டுரியான் பழங்களை உட்கொண்டதால் அவர் இறந்திருக்கக் கூடும் என்று அப்பகுதி போலீஸ் துறை கூறியுள்ளது.

மரணமடைந்த எடி (வயது 53) என்ற அந்த மினி வேன் ஓட்டுநர் இரத்த அழுத்தம்/கொதிப்பு நோயால் பாதிக்கப் பட்டிருந்தார். அவர், வெள்ளிக்கிழமை இரவு, அதிகமாக டுரியான் பழங்களை உட்கொண்டுள்ளார் என்று தென் தங்கேராங் போலீஸ் குற்றவியல் விசாரணை பிரிவு தலைவர் அலெக்ஸாண்டர் யுரிகோ கூறினார்.

“இரத்த அழுத்தம் நோயால் பாதிக்கப் பட்டிருந்த எடி, அதிகமான டுரியான் பழங்களை உட்கொண்டதால், அவருக்கு இரத்த அழுத்தம் ஏற்பட்டு, அவரின் இரத்த நாளங்கள் வெடித்துள்ளன. அதனைத் தொடர்ந்து, அவருக்கு மூக்கிலிருந்து இரத்தம் வெளிப்பட்டுள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.

மரணமடைந்த எடியின் உடலை அவரின் நண்பர்கள், அவரின் மினி வேனில் கண்டுபிடித்தனர்.”விசாரணையின் மூலம் அவரது மரணத்தின் பின்னணியில் எத்தகைய சந்தேகமும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

அவர் இரத்த அழுத்தம் நோயால் பாதிக்கப் பட்டிருந்தார் என்ற விவரத்தை, அவரின் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் பகிர்ந்துக் கொண்டனர்” என்று அலெக்ஸாண்டர் தெரிவித்தார்.

எடியின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த அவரின் குடும்பத்தார் ஒப்புக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிகமாக டுரியான் பழங்களை உட்கொண்டால், இரத்த அழுத்தம் அதிகரிக்கக் கூடும் என்று இந்தோனிசிய பல்கலைக்கழகத்தின் ஊட்டச் சத்து நிபுணர் மர்யா ஹர்யோனோ கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker