Latestஉலகம்

ஒரே மருத்துவமனையில் பணிபுரிந்த 31 தாதியருக்கு ஒரே சமயத்தில் பிரசவம்! -(Video)

வாஷிங்டன், ஜன.22- அமெரிக்காவின் மினாசோட்டா மாநிலத்தில் உள்ள செயிண்ட் கிளவுட் மருத்துவமனையில் பணியாற்றும் 31 தாதியர்கள் ஒரே காலக்கட்டத்தில் கர்ப்பமாகி, பிள்ளை பெற்றெடுத்த சம்பவம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

செயின்ட் கிளவுட் மருத்துவமனையில் பணியாற்றிய 31 தாதியர்களில் ஒருவருக்கு மட்டும் இரட்டைச் சந்தோஷம். அவருக்கு இரட்டைக் குழந்தைகள் அந்த மருத்துவமனையில் பிறந்துள்ளனர்.

வீடியோ- நன்றி : Inside edition

அவர்களில் 16 பேர் ஒரே நேரத்தில் கர்ப்பமாகி உள்ளனர். இவர்கள்  குழந்தைகளையும் ஒரே மாதத்தில் பெற்றுள்ளனர். இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால் குழந்தை பெற்ற தாதியர்களில் அதிகமானோர் மகப்பேறு பிரிவில் வேலை செய்பவர்கள்.

அண்மையில் இவர்கள் அனைவரும் அவர்களின் குழந்தைகளுடன் புகைப்படமெடுக்க மருத்துவமனைக்கு வந்துள்ளனர். முதலில் பிறந்த குழந்தை முதல் கடைசியாக பிறந்த குழந்தை வரை எண் வாரியாக வரிசைப்படுத்தி அவர்களுக்கு உடை அணிவிக்கப்பட்டிருந்தது.

தாதியர்களும் தங்களின் சீருடைகளில் வந்திருந்தனர். இந்தப் புகைப்படம் இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்தது.

இது தொடர்பாக பேசிய தாதியர்கள், ஒரே சமயத்தில் நாங்கள் அனைவரும் கர்ப்பமாக இருந்த போது நோயாளிகள் மிகவும் ஆச்சர்யமாக பார்த்தனர். இப்படி நடக்க வேண்டும் என நாங்கள் எந்தத் திட்டமும் போடவில்லை. எல்லாம் தானாகவே நடந்து விட்டது என்று கூறினர்.

குழந்தை பிறந்த பின் மீண்டும் பணிக்கு திரும்பியதும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்களின் வாழ்வில் இந்நிகழ்வை எப்போதுமே மறக்க முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker