Latestமலேசியா

ஒற்றுமையை வளர்க்க ஹரிராயா- தீபாவளி திறந்து இல்ல உபசரிப்பு – லிம் குவான்

கோலாலம்பூர், ஜன.22- நாட்டின் பல்வேற இன மக்களுக்கு இடையில் ஒற்றுமையை ஊக்குவிக்க தேசிய வர்த்தக மற்றும் தொழிற்துறை சம்மேளம் முயற்சிக்க வேண்டும் என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் அறிவுறுத்தினார்.

சீனப் புத்தாண்டின் போது மட்டும் திறந்த இல்ல விருந்துபசரிப்பு நிகழ்வுகளை நடத்தாமல், அனைத்து முக்கியப் பண்டிகைகளின் போதும் தேசிய வர்த்தக மற்றும் தொழிற்துறை சம்மேளனம் இந்த விருந்துபசரிப்புகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

“ஒற்றுமையை ஊக்குவிக்க வேண்டும் என்ற அடிப்படையில், ஹரிராயா மற்றும் தீபாவளி திருநாளின் போதும், தேசிய வர்த்தக மற்றும் தொழிற்துறை சம்மேளனம் திறந்த இல்ல விருந்துபசரிப்பை ஏற்பாடு செய்யலாம்” என்று அவர் கருத்துரைத்தார்.

தேசிய வர்த்தக மற்றும் தொழிற்துறை சம்மேளனம், நாட்டு மக்கள் மத்தியில் ஒற்றுமை நிலைக்க வேண்டும் என்ற அடிப்படையில், முதன் முறையாக திறந்த இல்ல விருந்துபசரிப்பு நிகழ்வை ஏற்பாடு செய்கிறது என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ தெர் லியோங் யாப் கூறினார் என்பது குறிப்பிடத் தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker