Latestமலேசியா

பினாங்கு கடலில் வாகனம் மீட்பு: கேவலமாக முகநூலில் கிண்டல்! நபர் மீது போலீஸில் புகார்!

ஜார்ஜ்டவுன், ஜன.22. பினாங்கு பாலத்தில் இருந்து கடலில் விழுந்து விட்ட வாகனத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டவர்களை கேவலப்படுத்தும் வகையில் முகநூலில் கிண்டலடித்த ஆசாமிக்கு எதிராக போலீஸில் புகார் செய்யப் பட்டுள்ளது.

லங்காவியைச் சேர்ந்த சுவா என்று அடையாளம் கூறப்பட்ட நபர், தம்முடைய முகநூல் பதிவில் இந்த மீட்பு நடவடிக்கையை மிக மோசமாக கேலி செய்துள்ளார்.

“நமது தீயணைப்பு, மீட்பு படைக் குழு’ என்ற தலைப்பில் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி இருப்பதோடு, மிக அருகில் இருப்பதையே தேடிக் கண்டு பிடிக்கவில்லையா, இவர்கள் தூங்கவும், சாப்பிடவும் தான் லாயக்கு” என்று விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார்.

நேற்று முன்தினம் கடலில் விழுந்த வாகனத்தையும், அதன் ஓட்டுனரின் உடலையும் தேடும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை, கடல் ரோந்து படை, கடல் அமலாக்கப் பிரிவு ஆகியவை இணைந்து ஈடுபட்டன.

இதனிடையே அந்த நபர் தமது முகநூலில் விமர்சித்திருந்த விதம் தொடர்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. மேலும், இது குறித்து விளக்கமளித்த கடற்படை கேப்டன் ஒருவர், கடலில் விழுந்த வாகனத்தை மீட்பதில் கடுமையான கடல் அலைகளுக்கு இடையே நாங்கள் போராட நேர்ந்தது என்று அவர் கூறினார்.

தைப்பூசத் தருணம், பெளர்ணமி என்பதால் கடல் அலைகள் ஆக்ரோஷமாக அடித்தன. அலைகள் கிட்டத்தட்ட 2.2 மீட்டர் உயரம் எழுந்த வண்ணம் இருந்தன என்றார் அவர்.

மேலும், பினாங்கு பாலத்திற்கு கீழ் கடற்படுகை மிகவும் தடிமமாக அமைந்துள்ளது. மேலும் மிக மென்மையான மண்ணால் உருவாகி இருந்ததால், வாகனம் இந்த மண்ணுக்குள் புதையுண்டு விட்டது. இதனால்,அதனை வெளியே இழுப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது என்று அந்த கேப்டன் விளக்கினார்.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker