Latestசினிமா

‘ஸ்ரீதேவி பங்களா’வில் நிறைய இரகசியங்கள்! -இயக்குநர்

மும்பை, ஜன.22- “ஸ்ரீதேவி பங்களா” திரைப்படத்தில் நிறைய இரகசியங்கள் உள்ளது என்று அப்படத்தின் இயக்குநர் பிராந்த் மாம்புலி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தை இயக்குநர் பிராந்த் மாம்புலி இயக்கி உள்ளார். இந்த படத்தின் டீசர் வெளியானது. அதில் நடிகை ஸ்ரீதேவி இறந்த போது குளியல் தொட்டியில் இறந்து கிடப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருந்ததாக சர்ச்சை கிளம்பியது.

அதனை அடுத்து அப்படத்தில் நடித்த நடிகை பிரியா வாரியருக்கும் இயக்குநர் பிராந்த் மாம்புலிக்கும் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் சட்டபடி நோட்டீஸ் அனுப்பினார்.

இதுகுறித்து இயக்குநர் பிராந்த் மாம்புலி அளித்த பேட்டியில், ஒரு நடிகையின் வாழ்க்கை குறித்து இந்தப்படம் எடுக்கப் பட்டுள்ளது. கங்கனாவை நடிக்க வைப்பதே முதல் திட்டம். ஆனால் அவர் மற்ற படங்களில் நடித்து வருவதால் கால்ஷீட் கிடைக்கவில்லை என்று கூறினார்.

மேலும் இப்படம் குறித்து அவர் தெரிவிக்கையில் வெளிநாடு செல்லும் ஒரு நடிகையின் வாழ்க்கை குறித்தே இப்படம் அமைந்துள்ளது.தொடர்ந்து இந்தப்படத்தில் நிறைய ரகசியங்கள் உள்ளன.

நடிகை ஸ்ரீதேவியின் ரசிகர்கள் படத்தை பார்த்து இது ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமா? என்று முடிவு செய்யட்டும் என்றும் அவர் ஸ்ரீதேவியை மிகவும் மதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker