Latestமலேசியா

அந்நிய தொழிலாளர் விண்ணப்பம்; ஆன்-லைனுக்கு மாறக்கூடும்! -குலா

புத்ராஜெயா, ஜன.23- அந்நிய தொழிலாளர்களின் வேலை விண்ணப்பம் மற்றும் பண பரிவர்த்தனை ஆகியவை ஆன்-லைன் சிஸ்டத்தை கடைபிடிக்க மனிதவள அமைச்சு பரிசீலித்து வருகிறது.

அதிகாரிகள் மக்களை நேரிடையாக சந்திப்பதால் சில விரும்பத் தகாத ஊழல் சம்பவங்கள் நிகழ்கின்றன., இணையம் வாயிலாக அனைத்து செயல்முறைகளும் அமைவதன் வாயிலாக ஊழல் சம்பவங்களைக் குறைக்கலாம் என்று மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் கூறினார்.

“முன்னாள் அரசாங்கத்தின் ஆட்சின் கீழ் நிகழ்த்தப்பட்ட ஊழல்கள் புதிய அரசாங்கத்தின் கீழ் தொடரக் கூடாது என்று நான் அமைச்சின் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளேன்.

அந்த ஊழல்கள் முழுமையாக ஒடுக்கப் பட வேண்டும் என்ற அடிப்படையில், இந்த முயற்சிகள் எடுக்கப் படுகின்றன” என்று அவர் தெரிவித்தார்.

ஊழலைத் தடுப்பது மட்டுமல்லாது, மக்களுக்கு அத்தியாவசியமான சேவைகளை வழங்க மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று குலசேகரன் குறிப்பிட்டார். நிதி சமபந்தப்பட்ட விஷயங்களில் அமைச்சுக்கு ஆன் லைன் சிஸ்டம் மூலம் விண்ணப்பங்களும் தொடர்புகளும் இடம்பெறுவது ஊழலைக் குறைக்கும்.

குறிப்பாக, அன்னியத் தொழிலாளர்களின் வேலை விண்ணப்பங்கள் ஆன் லைன் மூலம் இடம்பெறும் போது அதிகாரிகள் சில வகை ஊழல் நடவடிக்கைகளுக்கு இலக்காகாமல் இருக்க முடியும் என்றார் அவர்.

“மனிதவள அமைச்சிடம் முன்வைக்கப் படும் பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு 48 மணி நேரத்திற்குள் அமைச்சு பதில் வழங்க வேண்டும் என்பது அந்த மாற்றங்களில் ஒன்றாகும்” என்று அவர் சொன்னார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker