Latestஉலகம்

அரசுத்துறைகள் முடக்கம்: டிரம்புக்கு பாடகி லேடி காகா கண்டனம்

வாஷிங்டன், ஜன.23- அமெரிக்காவில் அரசுத்துறைகள் முடக்கம் தொடர்பாக அதிபர் டிரம்புக்கு  பிரபல பாடகி லேடி ககா கண்டனம் தெரிவித்துள்ளார்

மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் பிரச்சனை காரணமாக அமெரிக்காவில் பல்வேறு அரசுத்துறைகள் கடந்த 4 வாரங்களாக முடங்கி உள்ளது.  இதனால் அரசு ஊழியர்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர்.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக டிரம்புக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஹாலிவுட் திரையுலகின் பிரபல பாடகி லேடி ககா, அரசுத்துறைகள் முடக்கத்தை உடனடியாக  முடிவுக்கு கொண்டு வரும்படி வலியுறுத்தி உள்ளார்

இதுபற்றி அவர் கூறுகையில் அரசுத்துறைகள் வழக்கம் போல் சீராக இயங்குவதற்கான சூழ்நிலையை அதிபர் டிரம்ப் கொண்டு வரவேண்டும். ஏனெனில் வாரந்தோறும் கிடைக்கும் ஊதியத்தை நம்பித்தான் அரசு ஊழியர்களும் அவர்களின் குடும்பத்தினரும் வாழ்ந்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker