உலகம்

இளையோருக்கான ஊரடங்கு திட்டம்; மலேசியா அதற்கு தயாரா?

கோத்தா கினாபாலு, ஜன.23- 18 வயதிற்கு குறைவானர்கள், குறிப்பிட்ட மணி நேரத்திற்கு பின்னர், தங்களின் வீடுகளிலிருந்து வெளியேறுவதை தடுக்க ஊரடங்கு திட்டம் செயல்படுத்தப் பட வேண்டும் என்ற பரிந்துரையை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தினர்.

18 வயதிற்கு குறைந்தவர்கள் இரவு நேரங்களில் வீடுகளிலிருந்து வெளியேறுவதை தடுப்பதற்காக ஊரடங்கு திட்டத்தை செயல்படுத்துவதற்கு பதிலாக, நாட்டின் செயல்முறை அமைப்புகள், குறிப்பாக அமலாக்க அமைப்புகளில் மாற்றங்கள் செய்யப் பட வேண்டும் என்று மனித உரிமை நுகர்வோர் ஆர்வலரான பாட்ரீக் சிந்து கூறினார்.

“இளையோர்களை ‘தண்டிப்பதற்கு’ மாறாக, பாதுகாப்பு தொடர்பிலான அமலாக்க முறைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை அரசாங்கம் அதிகரிக்க வேண்டும். அதுமட்டுமல்லாது, போதைப்பொருள் விநியோகத்தை ஒடுக்கும் முயற்சிகள் அமல்படுத்தப் பட வேண்டும்.

“நாட்டின் அமைப்பு முறையில் தான் பிரச்சனைகள் உள்ளன. அதனால்தான் ஊழல் போன்ற விரும்பத்தகாத செயல்கள் நிகழ்கின்றன. நிலம், கடல் மற்றும் காற்று பாதைகள் வாயிலாக போதைப் பொருள் நாட்டினுள் நுழைகின்றன. அதனைக் கட்டுப் படுத்தும் பாதுகாப்பு அம்சங்கள் நிலை நாட்டப் பட வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker