Latestமலேசியா

உள்ளூர் தொழிலாளர்களை பாதுகாக்க அந்நியநிபுணர்களின் சம்பளம் அதிகரிப்பு 

கோலாலம்பூர், ஜன.23- மலேசிய திறன் தொழிலாளர்கள் அல்லது நிபுணர்களின் வேலைகளை பாதுகாக்கும் வகையில், அந்நிய திறன் வல்லுநர்களின் சம்பளம் அதிகரிக்கப் படலாம் என்று மனித வள அமைச்சர் எம்.குலசேகரன் கூறினார்

வெளிநாட்டு திறன் வல்லுநர்களுக்கு வழங்கப் படும் ரிம.3,000 சம்பளம், ரிம.5,000-ஆக உயர்த்தும் சாத்தியங்களை ஆராய, குழு ஒன்று அமைக்கப் படும்என்று அவர் சொன்னார்

வெளிநாட்டு தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்துவதன் வாயிலாக, உள்நாட்டு தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகமாக வழங்கப் படும் என்று அவர் கருத்துரைத்தார்

தற்போதைய சூழ்நிலையில், 71,000 வெளிநாட்டு நிபுணர்களில், 5 விழுக்காட்டினர் மட்டும் தான் இந்த ஊதியத்தை பெறும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்

வெளிநாட்டு நிபுணர்களுக்கு குறிப்பிடப் பட்டுள்ள சம்பளம் வழங்கப் பட வேண்டும் என்ற விதிமுறை அமலில் உள்ளதால், அவர்களை வேலைகளுக்கு நியமிக்க முதலாளிகள் சற்று தயக்கம் காண்பித்து வருகின்றனர்என்று அவர் தெரிவித்துக் கொண்டார்

அதன் வாயிலாக, நாட்டில் உள்ள திறன் வல்லுநர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப் படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker