Latestமலேசியா

எம்.ஆர்.டி. கேபிள் திருட்டு: ஆசாமி கைது!

கோலாலம்பூர், ஜன.23- எம்.ஆர்.டி. ரயில் நிலையம் ஒன்றில் கேபிள் திருடும் முயற்சியில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஆசாமியை ரேபிட் கே.எல். துணைப் போலீஸ் படைகைது செய்தனர்.

ரயில் தண்டவாளப் பகுதிக்குள் ஊடுருவிய இந்த நபரால் ரயில் போக்குவரத்துச் சேவையும் பாதிப்படைந்தது.

கேபிள் திருட்டுக்காக கைது செய்யப்பட்ட சந்தேகப் பேர்வழியின் முகத்தை மட்டும் மறைத்து விட்ட நிலையில் போலீசாரல் இழுத்துச் செல்லப்படும் காட்சியை எம்.ஆர்.டி நிர்வாகத்தினர் தங்களது முகநூலில் பதிவிட்டுள்ளனர்.

புசாட் பண்டார் டமான் சாராவுக்கும் பிலியோ டமான்சாராவுக்கும் இடையே ரயில் தண்டவாளப் பகுதிக்குள் இந்த நபர் அத்து மீறி நுழைந்ததால், பாதுகாப்பை முன்னிட்டு மின்னாற்றல் குறைந்து இருந்ததை நிறுவனம் கண்டறிந்து நடவடிக்கையில் இறங்கியதாக முகநூலில் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறிப்பிட்ட பகுதியில் எம்.ஆர்.டி. பயணம் தாமதம் அடைந்ததாக பயணிகள் புகார் செய்தனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker