Latestஉலகம்

கூட்ட நெரிசலை குறைக்க மெட்ரோ  ரெயில் பயணிகளுக்கு இலவச உணவு

தோக்கியோ, ஜன.23- நீண்ட நெரிசலை கட்டுப்படுத்த புதிய யுக்தியாக ஜப்பானில் மெட்ரா ரயில் பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்பட உள்ளது

ஜப்பானை பொறுத்தவரையில் மக்கள் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தான் பிரதானமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

இதனால் அங்குள்ள மெட்ரோ ரெயில் நிலையங்கள் எப்போதும் பரபரப்பாக காணப் படுகின்றன

குறிப்பாகதலைநகர் தோக்கியோவில் உள்ள டோசாய் மெட்ரோ ரெயில் நிலையத்தில் மாலை வேளையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்

ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் வருவதால் அந்த ரெயில் நிலையம் திக்கு முக்காடி போகிறது

இதற்கு தீர்வு காண ஜப்பான் மெட்ரோ நிறுவனம் புதிய யுக்தியை கையாள முடிவு செய்திருக்கிறது

அதாவது டோசாய் மெட்ரோ ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் தொடங்குவதற்கு முன்பாக வரக்கூடிய பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 2,000 முதல் 3,000 பயணிகளுக்கு இலவச உணவு வழங்க வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.  

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker