Latestஇந்தியா

இன்று விண்ணில் பாய்கிறது தமிழக மாணவனின்   சின்னஞ் சிறிய செயற்கைக் கோள்!

சென்னை, ஜன.24- தமிழக மாணவன் ரிபாத் ஷாருக் உருவாக்கிய உலகிலேயே குறைந்த எடை கொண்ட செயற்கைகோள்,எ.எஸ்.எல்,வி ராக்கெட் மூலம் இன்றிரவு விண்ணில் ஏவப்படுகிறது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நிறுவனம் திட மற்றும் திரவ நிலைகளுடன் 4 நிலைகளை கொண்ட பி.எஸ்.எல்.வி சி-44 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இன்று (ஜனவரி 24) இரவு 11.40 மணிக்கு ஏவ உள்ளது

இதனுடன் ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ என்ற அமைப்பு மற்றும் ரிபாத் ஷாருக், ஸ்ரீமதி கேசன் உள்ளிட்ட மாணவர்கள் இணைந்து சிறிய அளவில் தயாரித்த ‘கலாம் சாட்’ செயற்கைக் கோள் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்த மைக்ரோசாட் -ஆர் ஆகிய 2 செயற்கைக் கோள்களும் விண்ணில் பாய்ச்சப் படவுள்ளன.

மாணவர்கள் தயாரித்த கலாம் சாட் செயற்கைகோள் ரேடியோ சேவைக்காவும்- இஸ்ரோ தயாரித்த மைக்ரோசாட் -ஆர்  செயற்கைகோள், பூமியைக் கண்காணிக்காகவும் விண்ணில் செலுத்தப்பட உள்ளது என இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker