Latestசினிமா

”என்னை தீபிகாவின் மாஜி காதலன் என்று சொல்லாதீர்” -கெஞ்சுகிறார் நடிகர்

மும்பை, ஜன. 24- தன்னை தீபிகா படுகோனின் ‘முன்னாள் காதலர்’ என்று தயவு செய்து குறிப்பிட வேண்டாம் என நடிகர் நிஹார் பாண்டியா ஊடகங்களிடம் மன்றாடியுள்ளார்.

தீபிகா படுகோன் நடிக்க வந்த புதிதில் மாடல் நிஹார் பாண்டியாவை காதலித்தார். அதன் பிறகு அவர்கள் பிரிந்து விட்டனர். காதல் முறிவுக்கு பின்னரும் இன்னமும் நிஹாரை, “தீபிகாவின் முன்னாள் காதலர்” என்றே கூறுகின்றனர். இது குறித்து நிஹார் வருத்தம் அடைந்துள்ளார்.

மாடலாக இருந்து, நடிகராகியுள்ள நிஹார் பாண்டியாவுக்கும் பாடகி நீத்தி மோகனுக்கும் வரும் பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற உள்ளது. அனைத்து ஊடகங்களிலும் ‘தீபிகாவின் முன்னாள் காதலர் நிஹாருக்கு திருமணம்’ என்று செய்திகள் வெளியாகின. இதை பார்த்த நிஹார் வருத்தம் அடைந்துள்ளார்.

தீபிகாவுக்கு திருமணமாகிவிட்டது. அவர் மீது எனக்கு எந்த மனக் கசப்பும் இல்லை. அவர் நன்றாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். அவரும் என் விஷயத்தில் அப்படித் தான் விரும்புவார் என்று நினைக்கிறேன் என்று நிஹார் தெரிவித்துள்ளார்.

இதனால், செய்தி தலைப்புகளில் ‘தீபிகாவின் முன்னாள் காதலர்’ என்று போடுவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எனக்கு என்று ஓர் அடையாளம் இருக்கிறது. நான் மணிகர்னிகா படம் மூலம் நடிகராகியுள்ளேன். அந்த செய்திகளிலும் தீபிகாவின் முன்னாள் காதலர் நடிகராகி உள்ளார் என்றே போடுகிறார்கள். இது மாறினால் நல்லது என்கிறார் நிஹார்.

தீபிகாவும் நிஹாரும் காதல் முறிந்தாலும் இன்னும் நல்ல நண்பர்களாக இருப்பதாக இருவருமே தெரிவித்துள்ளனர். நிஹார் தன்னை விட வயதில் மூத்தவரான பாடகி நீத்தி மோகனை திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார். விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker