Latestமலேசியா

காரில் தப்பியோடி கொள்ளையன், ஆற்றினுள் விழுந்ததால் பிடிபட்டான்!

கோலாலம்பூர், ஜன.24- தேடப்பட்டு வந்த ஒரு கொள்ளையன்,
போலீசாரின் பிடியிலிருந்து தப்பியோட முயன்ற போது அவனது கார்,  ஆற்றினுள் விழுந்து விட்டதால் தப்ப முடியாமல் சிக்கிக் கொண்டான்.

இரண்டு நாள்களுக்கு முன்னர், ஜாலான் பெனாம்பாங்கிலுள்ள தாமான் ஹிபுரான் என்ற இடத்தில் நடந்த கொள்ளைத் தொடர்பாக போலீசார் அந்த நபரை வலைவீசித் தேடி வந்தனர்.

நேற்றி நண்பகல் 1.30 மணியளவில் கோத்தா கினாபாலுவிலுள்ள பேரங்காடி ஒன்றில் அவன் போலீசாரின் கண்ணில் பட்டான்.

அவன் காரில் ஏறிப் புறப்படும் தருணத்தில் அவனைப் பார்த்து விட்ட போலீசார், அவனை மடக்கிப் பிடிக்க வழிமறித்த போது போலீஸ்காரர்கள் மீது மோதி விட்டு அங்கிருந்து அவன் தப்பித்துச் சென்றான்.

போலீஸ் குழு அவனை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்தது. காரின் முன்புறத்தில் குண்டுகள் பாய்ந்தன. தொடர்ந்து தப்பிக்க முயன்ற அந்த நபரின் வாகனம் கட்டுப்பாட்டை இழந்தது அருகிலிருந்த ஆற்றுக்குள் போய் விழுந்தது.

பின்னர், போலீசார் அவனைக் கைது செய்தனர். கார் ஆற்றினுள் விழுந்ததால் அந்தக் கொள்ளையன் காயமடைந்ததாகவும் அவனது கார் பின்னர் ஆற்றில் இருந்து மீடகப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker