Latestஉலகம்

இருதய நோய்: சிறையில் நவாஸ் உடல் நிலை பாதிப்பு!

லாகூர், ஜன.24- சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு உடல் நிலை மோசமாக உள்ளதால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க மருத்துவக் குழு பரிந்துரைத்தது.

பாகிஸ்தான்  முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் ஊழல் வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத் தணடனை விதித்து கடந்த மாதம் 24 ஆம் தேதி தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு லாகூரில் உள்ள  சிறையில் அடைக்கப்பட்டார்.

நவாஸ் ஷெரிப்புக்கு இதயநோய் பாதிப்பு இருக்கிறது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப் பட்டார். பரிசோதனைக்குப் பின் மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் நவாஸ் ஷெரிப்பின் உடல் நிலை மோசம் அடைந்துள்ளதாக அவரது மருத்துவரும் இருதயநோய் நிபுணருமான அட்னான் கான் தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

நவாஸ் ஷெரிப்புக்கு இருதய நோய் மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. அதன் காரணமாக அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி உள்ளது.

சிறையில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்க முடியாது. எனவே அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

நவாஸ் ஷெரிப்பை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று ஏற்கனவே மருத்துவக் குழு பரிந்துரைத்து உள்ளது. அந்த பரிந்துரையை அரசு ஏற்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker