Latestஉலகம்

சீனாவில் போனஸ் பணத்தில் சுவர் எழுப்பிய நிறுவனம்!

பெய்ஜிங், ஜன.24- சீனப் புத்தாண்டு  பிப்ரவரி 5ஆம் தேதி பிறக்கவிருப்பதை  முன்னிட்டு சீனாவில் உள்ள பல நிறுவனங்கள் தங்களது இலாப ஈவை பணியாளர்களுக்கு போனசாக கொடுக்க  தயாராகி விட்டனர்.

அதன் ஒரு பகுதியாக சீனாவின் நஞ்ஞாங் பகுதியில் உள்ள இரும்பு  தயாரிக்கும் நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்காக கட்டுக் கட்டாகப் பணத்தை வைத்து சுவர் எழுப்பியுள்ளது. 160 மில்லியன் யுவான் (ரிம. 99.19 மில்லியன்) நோட்டுகளால் இந்தப் பணச் சுவர் கட்டப்பட்டது.

அந்தப் பணத்தை 5,000 ஊழியர்களுக்கு பங்கிட்டு ஒவ்வொரு பணியாளர்களுக்கு சுமார் 19 ஆயிரம் ரிங்கிட் போனஸாக வழங்கப்பட்டது.

பஃங்டா இரும்பு தயாரிக்குப் தொழில் நுட்ப நிறுவனமே அதுவாகும். நஞ்ஞாங்  ஜியாங்சி மாநிலத்தில் உள்ளது. இந்நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மிகப்பெரிய அளவுக்கு போனஸ் வழங்குவது இது முதன் முறையல்ல. 2011 ஆண்டு இது 373 மில்லியனபிலாப ஈட்டை ஊழியர்களுக்கு போனஸாக வழங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker