Latestமலேசியா

ஜன.31 தொடங்கி மாமன்னர் பணியை தொடங்குவார் பகாங் சுல்தான்!

கோலாலம்பூர்,ஜன.24- மலேசியாவின் புதிய மாமன்னராக அண்மையில் பகாங் சுல்தானாக முடிசூட்டப்பட்ட சுல்தான் தெங்கு அப்துல்லா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வேளை அவரது அந்தப் பணியை ஜனவரி 31-ஆம் தேதி முதல் தொடங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷா மீண்டும் துணை மாமன்னராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று கோலாலம்பூர், இஸ்தானா நெகாராவில் நடந்த மலாய் ஆட்சியாளர் மன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில், நாட்டின் 16-ஆவது மாமன்னரைத் தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பு நடந்தது.

அந்த கூட்டத்திற்கு, கிளந்தான் சுல்தானை தவிர மற்ற மலாய் ஆட்சியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டர். அக்கூட்டத்திற்கு திரங்கானு சுல்தான், சுல்தான் மிஸான் சைனால் அபிடின் தலைமை ஏற்றார். அந்த கூட்டம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்து.

ஜனவரி 6-ஆம் தேதியன்று, மாமன்னர் பதவியில் இருந்து கிளந்தான் சுல்தான், சுல்தான் முகமட் V விலகியதை அடுத்து, இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

கிளந்தான் சுல்தானுக்கு அடுத்து மாமன்னராக வரும் வாய்ப்பு முறையே பஹாங், ஜொகூர், பேரா சுல்தான்களுக்குத்தான்.
தெங்கு அப்துல்லா பகாங் சுல்தானாக முடிசூட்டப்படுவதற்கு முன்னதாக அவரது தந்தையார் சுல்தானாக இருந்தார். எனினும், அவர் நோய்வாய்ப்பட்டிருப்பதால், யார் அடுத்த மாமன்னராவது என்ற குழப்பம் ஏற்பட்டது.

அச்சமயத்தில், பகாங் அரசக் குடும்பம் விரைந்து ஒரு சிறப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர்.

பகாங் சுல்தான் அரியணையை தமது புதல்வர் தெங்கு அப்துல்லாவுக்கு வழங்க சம்மதம் தெரிவித்ததும், பின்னர் தெங்கு அப்துல்லா அம்மாநில சுல்தானாக ஜனவரி 12-ஆம் தேதியன்றி அரியணையில் அமர்ந்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker