Latestமலேசியா

மலேசியா வந்த அயர்லாந்து பயணி என்ன ஆனார் ? மர்மம் நீடிக்கிறது.

கோலாலம்பூர், ஜன.24- கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மலேசியாவுக்கு வந்த அயர்லாந்தைச் சேர்ந்த சுற்றுப் பயணியான ஸ்டீபன் வார்டி என்பவர் என்ன ஆனார்? எங்கே போனார்? மர்மம் நீடிக்கிறது.

அவரைக் கண்டுபிடிக்கும் பணியில் மலேசியப் போலீசார் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர். கடந்த நவம்பர் மாதம் 15 ஆம் தேதி 32 வயதுடைய ஸ்டீபன் மலேசியாவுக்கு வந்துள்ளார்.

ஆகக்கடைசியாக, டிசம்பர் 28 ஆம் தேதி ஜாலான் சுல்தான் இஸ்மாயிலுள்ள ‘மெர்கு சம்மர்’ தங்கும் விடுதியில் அவர் காணப்பட்டார்.

கடந்த முன்று மாதங்களுக்கு மேலாக, ஸ்டீபனைக் காணவில்லை. அவருடைய தொடர்புகள் முற்றாக துண்டிக்கப் பட்டதாக அவரது குடும்பத்தினர் புகார் கூறினர்.

இதுவரையில் அவர் எங்கே இருக்கிறார், எப்படி இருக்கிறார் என்ற விபரம் கிடைக்கவில்லை. போலீசாரின் புலன் விசாரணை தொடர்கிறது என்று டான் வாங்கி போலீஸ் தலைவர் சஹாருடின் அப்துல்லா தெரிவித்தார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker