Latestசினிமா

ரஜினியின் மகள் சவுந்தர்யாவுக்கு 2 வாரங்களில் 2ஆவது திருமணம்!

சென்னை, ஜன.24- நடிகர் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் விசாகன் வணங்காமுடி ஆகியோரின் திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெறும் இத்திருமணத்தில், பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அஸ்வினை 2010 இல் திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவரும் சேத்துப்பட்டு வீட்டில் தனிக்குடித்தனம் இருந்து வந்தனர். இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தையும் உண்டு. இந்நிலையில் இவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக விவகாரத்து பெற்றனர்.

இந்நிலையில் சவுந்தர்யாவுக்கும் தொழில் அதிபர் விசாகனுக்கும் அண்மையில் சென்னையில் திருமணம் நிச்சயிக்கப் பட்டதாக செய்தி வெளியானது.

தொழிலதிபர் அஸ்வினுக்கு ஏற்கனவே மறுமணம் ஆகிவிட்டது. விசாகன் மருந்து தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். ‘வஞ்சகர் உலகம்’ படத்தில் இவர் நடித்தும் உள்ளார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker