Latestவிளையாட்டு

ஆசிய கிண்ணம்: சீனா சிதறியது! அரையிறுதியில் ஈரான் –ஜப்பான்!

அபுதாபி,ஜன.25-ஆசிய கிண்ண கால்பந்துப் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் ஈரான் குழு 3-0 என்ற கோல்கணக்கில் சீனாவை சிதறடித்தது.

ஐக்கிய அரபுசிற்றரசில் நடந்து வரும் ஆசிய கிண்ண கால்பந்துப் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது.

நேற்று நடந்த இரண்டு காலிறுதி ஆட்டங்களில் ஈரான் குழு 3-0 இல் சீனாவையும், ஜப்பான் 1-0 இல் வியட்னாமையும் வீழ்த்தி அரையிறுதி ஆட்டத்திற்கு காலடி எடுத்து வைத்தன.

அரையிறுதி ஆட்டத்தில் ஈரானும் ஜப்பானும் மோதவுள்ளன. முற்பகுதி ஆட்டத்தில் சீனாவுக்கு எதிராக 2-0 இல் முன்னணி வகித்த ஈரான், ஆட்டம் முடிய சில வினாடிகள் இருக்கும் வேளையில் மேலும் ஒரு கோலை அடித்தது.

எனினும், ஜப்பான் கடுமையான போராட்டத்திற்குப் பின்னர் பெனால்டி கோல் வழி 1-0 இல் வியட்னாமை வென்றது. இன்று மேலும் இரு காலிறுதி ஆட்டங்கள் நடைபெறவிருக்கின்றன.

இதில் தென் கொரியக் குழு கத்தாருடனும் ஐக்கிய அரபுசிற்றரசுக் குழு, ஆஸ்திரேலியாவுடனும் மோதவிருக்கின்றன

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker