Latestவிளையாட்டு

இறுதியாட்டம்: மன். சிட்டியுடன் செல்சீ பலப் பரிட்சை!

லண்டன், ஜன.25 – இங்கிலாந்தின் ‘கராபாவ்’ கிண்ண கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்திற்கு செல்சீ தேர்வு பெற்றது. அரையிறுதி ஆட்டதில் டோட்டன்ஹாம் குழுவை 4-2 என்ற பெனால்டிகளில் வீழ்த்தி செல்சீ இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இதற்கு முன்பு விம்பிளி அரங்கத்தில் நடந்த முதல் கட்ட ஆட்டத்தில் டோட்டன்ஹாம் 1-0 என்ற கோல் கணக்கில் செல்சீயை வீழ்த்தி இருந்தது.

எனினும், செல்சீயின் சொந்த அரங்கமான ஸ்டாம்போர்டு பிரிட்ஜில் நடந்த 2-ஆவது கட்ட மோதலில் செல்சீ குழு 2-1இல் வென்றால், கோல் விகித அடிப்படையில் இரு குழுக்களும் 2-2என்ற கோல்கணக்கில் சமநிலை கண்டன.

இதனைத் தொடர்ந்து பெனால்டிகள் வழி வெற்றி – தோல்வி நிர்ணயிக்கப்பட்டது. இதில் செல்சீ 4 பெனால்டிகளை கோலாக்கிய வேளையில் டோட்டன்ஹாம் 2 பெனால்டிகளை மட்டுமே கோலாக்கியது.

இந்நிலையில் இறுதியாட்டத்திற்கு தேர்வுபெற்றுள்ள செல்சீ, சாம்பியன் கிண்ணத்திற்கான போட்டியில் மன்செஸ்ட்டர் சிட்டி குழுவுடன் அடுத்து பலப் பரிட்சையில் இறங்கவிருக்கிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker