Latestவிளையாட்டு

நிர்வாகி பதவி: நீக்கப்பட்டார் ஹென்றி!

மொனாகோ, ஜன.25. பிரசித்திப் பெற்ற முன்னாள் கால்பந்து வீரரான தியெரி ஹென்றி திடீரென மொனாகோ கால்பந்து குழுவின் நிர்வாகி பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டார்.

மூன்று மாத காலத்திற்கு முன்பு தான் அக்குழுவின் நிர்வாகியாக ஹென்றி நியமிக்கப்பட்டார். இவரது நிர்வாகத்தின் கீழ் 20 ஆட்டங்களை ஆடியுள்ள அக்குழு 5 ஆட்டங்களில் மட்டுமே வென்றது.

பிரான்ஸ் லீக்-1 இல் இருந்து வெளியேற்றப் படும் அபாயக் கட்டத்தில் மொனாகோ இருந்து வருகிறது. இந்நிலையில் ஹென்றியை அந்தக் கிளப் நிர்வாகம் நீக்கி உள்ளது.

எனினும், அவர் நீக்கப்படுவார் என்ற தகவல் கடந்த ஓரிரு தினங்களாகவே பரவலாகி வந்தது. அர்சனல் குழுவின் விளையாடி வந்துள்ள ஹென்றி அக்குழுவுக்கு அதிகமான கோல்களை அடித்தவர் என்ற பெருமைக்குரியவராக விளங்குகிறார்.

எனினும் உதவி நிர்வாகியாக சில கால்பந்து கிளப்புகளில் பணியாற்றி இருந்தாலும் நிர்வாகியாக அவர் முதன் முதலில் பணிபுரிந்தது மொனாகோ குழுவில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker