Latestமலேசியா

மக்கள் விரும்பாவிடில் விலகத் தயார்! – தேர்தல் ஆணைய தலைவர்

கோலாலம்பூர், ஜன.25- கேமரன் மலை இடைத் தேர்தல் காலக் கட்டத்தில் தமது சேவை திருப்திகரமாக இல்லை என்று பொதுமக்கள் கருதும் பட்சத்தில் தாம் பதவி விலக தயாராக இருப்பதாக தேர்தல் ஆணையத்தின் ஆணையர் அஸார் அஸிஸான் ஹரூண் கூறியுள்ளார்.

நாளை கேமரன் மலைத் தொகுதிக்கான இடைத் தேர்தல் நடைபெறவிருக்கும் வேளையில், தனது டுவிட்டர் அகப்பக்கத்தில் அஸார் அவ்வாறு டுவீட் செய்துள்ளார்.

“மக்களுக்கான எனது சேவையின் தரத்தை நிர்ணயிக்கும் பொறுப்பை நான் 30 மில்லியன் மலேசியர்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் கைகளில் ஒப்படைக்கிறேன்” என்று அவர் கூறினார்.

“அந்த மக்களில் பெரும்பாலானோர் எனது சேவையால் திருப்தி அடையவில்லை என்று கூறினால், அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களிக்க வேண்டும் என்று அவர்கள் (மக்கள்) கேட்டுக் கொள்ளலாம்.

“எனக்கு எதிராக வாக்களிப்பு முறை தொடங்கப் பட்டால், அதற்கு மறுப்பு ஏதும் தெரிவிக்காமல், நான் உடனடியாக பதவி விலகுவேன். இது எனது வாக்குறுதி” என்று அவர் சொன்னார்.

தேசிய முன்னணியின் கோட்டைகளாக கருதப் படும் சில வாக்குப் பதிவு மையங்களை தேர்தல் ஆணையம் மூடியதைத் தொடர்ந்து, அஸாருக்கு எதிராக பலர் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாது, இந்த இடைத் தேர்தலில் பக்காத்தான் கூட்டணியால் நிகழ்த்தப் படும் தேர்தல் குற்றங்களை அஸார் கண்டும் காணாதது போல் இருக்கின்றனர் என்றும், அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க அவர் தயங்குகிறார் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker