Latestமலேசியா

‘மச்சான்’ அஜித்துடன் நடிக்க மாட்டேன்! -மைத்துனர் ரிச்சர்ட்

சென்னை, ஜன.25- தமிழ்s சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவரின் மைத்துனர் அதாவது நடிகை ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட். இவரும் பல ஆண்டுகளாக பல படங்களில் நடித்து வருகிறார். ஆனால் அவருக்கான இடம் இன்னும் சரியாக கிடைக்கவில்லை.

இந்நிலையில் தற்போது “வச்சி செஞ்சுட்டான்” என்கிற படத்தில் நடிக்கிறார். ஆண்டாள் ரமேஷ் இயக்குகிறார்.அதன் படப்படிப்பு பூஜையுடன் துவங்கியது.

இதில் கலந்து கொண்ட பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய ரிச்சர்ட் சமூகத்திற்கு ஒரு முக்கிய செய்தி சொல்கிற படமாக “வச்சி செஞ்சுட்டான்” படம் இருக்கும். ஐ.டி.யில் வேலை பார்க்கும் நபராக நடித்திருக்கிறேன்.

திருமண வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்கள் உள்ளிட்ட பல பிரச்சனைகளைp பேசும் படமாக இப்படம் இருக்கும். நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறேன். தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து வருகிறேன்.

நேரம் வரும் போது எனக்கான இடம் கிடைக்கும். அதற்காக அஜித்துடன் கண்டிப்பாக இணைந்து நடிக்க மாட்டேன் . குடும்பம் வேறு சினிமா வேறு என்கிறார் நடிகர் ரிச்சர்ட்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker