Latestவிளையாட்டு

விமானத்துடன் காணாமல் போன கால்பந்து வீரர்! தேடும் பணி நிறுத்தம்!

லண்டன். ஜன.25- மலேசியக் கோடீஸ்வரர் டான்ஶ்ரீ வின்செண்ட் டானுக்குச் சொந்தமான கார்டிப் சிட்டி பிரிமியர் லீக் கால்பந்து குழுவுக்கு விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டு, தனி விமானத்தில் கார்டிப் சிட்டிக்கு வந்து கொண்டிருந்த போது காணாமல் போன கால்பந்து வீரர் எமிலியானோ சாலா (வயது 28) என்பவரைத் தேடும் பணி நிறுத்தப்பட்டு விட்டது.

கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் அர்ஜென்டினாவைச் சேர்ந்தவரான எமிலியானோவும், அவருடன் விமானத்தில் பயணம் செய்த விமானி டேவிட் இப்போட்சனும் பிரான்சுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான கேனல் ஐலண்ட்ஸ் பகுதியில் காணாமல் போயினர்.

விமானத்துடனான தொடர்பு முற்றாகத் துண்டிக்கப்பட்ட நிலையில், தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. எனினும், முயற்சி பலன் தராததாலும், இவர்கள் உயிர் பிழைத்திருக்கும் சாத்தியம் மிக மிகக் குறைவு என்பதாலும் மீட்புப் பணி நிறுத்தப்பட்டது.

எனினும், எமிலியானோவின் சகோதரி ரோமினா சாலாவும் அவரது குடும்பத்தினரும், தேடும் பணியை நிறுத்த வேண்டாம் என்று கண்ணீருடன் மன்றாடியுள்ளனர்.

பிரான்சின் நன்டெஸ் குழுக்கு விளையாடி வந்த எமிலியானோ, இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் விளையாட மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார்.

கார்டிப் சிட்டி குழு அவரை 15 மில்லியன் பவுண்டிற்கு ஒப்பந்தம் செய்தது. கார்டிப் குழுவுடன் பயிற்சியில் ஈடுபடுவதற்கு, பிரான்சில் இருந்து தனி விமானத்தில் அவர் வந்து கொண்டிருந்த போது விமானம் கடலில் விபத்துக்கு உள்ளாகி விட்டதாக நம்பப்படுகிறது.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker