Latestமலேசியா

1எம்டிபி நிதி மோசடி: ஜோ லோவ்வின் பெற்றோரை போலீஸ் தேடுகிறது!

கோலாலம்பூர், ஜன.25- 1எம்டிபி நிறுவனத்தின் நிதி மோசடி விவகார விசாரணைக்கு உதவும் பொருட்டு, தேடப்பட்டு வரும் தொழிலதிபர் ஜோ லோவ்வின் பெற்றோரையும் மேலும் இருவரையும் போலீஸ் துறை தேடி வருகிறது.

லோவ்வின் பெற்றோர்களான டான்ஸ்ரீ லேர்ரி லோவ் ஹொக் பெங் மற்றும் கோ காய்க் ஈவ் மற்றும் சிங்கப்பூர் பிரஜைகளான ஷப்னம் அல்லது நதாஷா மிர்பூரி (வயது 54) மற்றும் டான் கிம் லூங் (வயது 40) ஆகிய நால்வரையும் போலீசார் தேடி வருகின்றனர் என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் ஃபுஸி ஹரூண் கூறினார்.

பண ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 4 (1) பிரிவின் கீழ், பயங்கரவாத நிதியை எதிர்க்கும் சட்டத்தின்  கீழ் மற்றும் 2001-ஆம் ஆண்டின் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்க்கும் சட்டத்தின் கீழ் பதிவாகியுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் பொருட்டு, அந்த நால்வரும் தேடப் பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

“அந்நால்வர் குறித்த தகவல் அறிந்த பொதுமக்கள், உடனடியாக போலீசாரை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்” என்று ஃபுஸி ஹரூண் அறிக்கை ஒன்றில் சொன்னார்.

அந்தத் தகவலை அறிந்திருப்பவர்கள், 03- 26101402 என்ற தொலைபேசி எண்ணில் சூப்ரீண்ட் ஃபூ வேய் மின் அல்லது துணை சூப்ரீண்ட் அல்பானி ஹம்சா ஆகியோரை தொடர்புக் கொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker