Latestமலேசியா

குப்பைகளைப் பணமாக்க வழி காண்போம்!! – சிங்கை அமைச்சர்

சிங்கப்பூர், ஜன.26- குப்பையைச் ‘செல்வமாக’ மாற்றுவது குறித்து யோசித்தால் சிங்கப்பூர் மற்றும் சுற்றுச் சூழலின் எதிர்காலத்தை பாதுகாக்க வழிகிடைக்கும் என்று சிங்கையின் சுற்றுச்சூழல், நீர் வள அமைச்சர் மசாகோஸ் ஷுல்கிப்லி கூறினார்.

புதுவகை பொருளியல் வளர்ச்சியை நாடு தழுவிக் கொள்ள வேண்டும். இயற்கை வளங்களை பயன்படுத்துவதில் மட்டும் கவனம் செலுத்தக்கூடாது என்று சுற்றுச்சூழல் தொடர்பான கூட்டம் ஒன்றில் அவர் உரையாற்றினார்.

வழிவழியாகக் கடைப்பிடிக்கப்படும் பொருளியல் அணுகுமுறையை விட, மாற்று அணுகு முறையை நாம் கடைபிடிக்கவேண்டும். குப்பைகளை வளமாக மாற்றுவதன் மூலம் பொதுவாக வீசப்படும் பொருட்களை கொண்டு புதிய பொருளியல் மதிப்பை உருவாக்கலாம் என்றார் அமைச்சர் மசாகோஸ்.

இதிலிருந்து புதிய வகை தொழிற்துறைகள் குறையில்லாமல் உருவாகலாம். புதிய தொழிற்துறைகளில் ஊழியர்கள் புத்தாக்கமிக்க பொருட்களையும் குப்பை மறுபயனீடு செயல் முறையையும் வடிவமைக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker