Latestமலேசியா

கேமரன்மலையில் தே.மு. அபார வெற்றி! 3,238 வாக்குகள் வித்தியாசம்! மனோகரன் தோல்வி!

கேமரன்மலை. ஜன.26- மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட கேமரன்மலை நாடாளுமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் ரம்லி முகம்மட நோர் கிட்டத்தட்ட 12,038 வாக்குகளில் வெற்றி பெற்றார். தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ முடிவு இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது .

பக்காத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிட்ட ஜசெக வேட்பாளர் எம். மனோகரன் 8,800 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

மொத்தம் 3,238 வாக்குகள் வித்தியாசத்தில் தேசிய முன்னணி இத்தொகுதியை தற்காத்துக் கொண்டது. கடந்த மே மாதம் 9ஆம் தேதி நடந்த பொதுத்தேர்தலுக்குப் பின்னர் பின்னர் அடுத்தடுத்து இடைத் தேர்தல்களில் தொடர்ச்சியாக தோல்வி கண்டு வந்த தேசிய முன்னணி, இம்முறை கேமரன் மலையில் பக்காதான் ஹராப்பானை தடுத்து நிறுத்தியுள்ளது வைத்துக் கொண்டுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் ஓராங் அஸ்லி இனத்தைச் சேர்ந்த ஒரு முன்னாள் போலீஸ் உயர் அதிகாரியான ரம்லி முகம்மட் நோர் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது ஓராங் அஸ்லி எம்.பி. என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்றுள்ளார்.

கேமரன் மலை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஒரு வழக்கறிஞரான எம். மனோகரன், மூன்றாவது முறையாக இங்கு தோல்வியைச் சந்தித்துள்ளார்.

சுயேட்சைகளாக போட்டியிட்ட சாலேவுடின் தாலிப் 314 வாக்குகளும் விவசாயிகள் இயக்கத்தைச் சேர்ந்த வோங் செங் யீ 276 வாக்குகளும் பெற்றனர். இங்கு 68.79 விழுக்காடு வாக்குகள் பதிவாயின.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker