Latestமலேசியா

கோலாலம்பூர் இந்தியா ஹவுசில் 70ஆவது குடியரசு தின விழா! -(Video)

கோலாலம்பூர், ஜன.26- இந்தியாவிலும் உலக அளவிலும் இன்று ஜனவரி 26ஆம் தேதி இந்தியாவின் 70ஆவது குடியரசு தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் அமைந்திருக்கும் இந்தியா ஹவுசில் அந்நாட்டின் தேசிய கீதம் முழங்க குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.

இந்தியத் தூதர் ஶ்ரீ மிர்துல் குமார் தலைமையில் இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது. திரளான இந்திய பிரஜைகளும் அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு குடியரசு தின வாழ்த்துக்களைப் பறிமாறிக் கொண்டனர்.

மேலும், இவ்விழாவில் இந்திய அதிபர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் குடியரசு தின உரையை தூதர் ஶ்ரீ மிர்துல் குமார் வாசித்தார். இன்றைய குடியரசு தின நிகழ்வு, தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 150 ஆம் ஆண்டு பிறந்த நிகழ்வோடு சேர்ந்து அமைந்திருப்பது சிறப்பான அம்சம் என்று அவரது உரையில் சுட்டிக் காட்டப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker