Latestஇந்தியா

பங்காரு அடிகளாருக்கு ‘பத்மஸ்ரீ’ விருது

புதுடில்லி, ஜன.26- தமிழகத்தில் ஆன்மிகப் பணி மேற்கொண்டு வரும் பங்காரு அடிகள் உள்பட 112 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இவர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களான மதுரை மூதாட்டி சின்னப்பிள்ளை, பங்காரு அடிகளார் உள்ளிட்ட எழுவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

112 பேரில் 4 பேருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்படுகிறது. 94 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அளிக்கப்படுகிறது. விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்டோரில் 21 பேர் பெண்கள் ஆவர்.

விருது பெறும் 112 பேரில் ஒருவர் திருநங்கை சமூகத்தைச் சேர்ந்தவர். தமிழகத்தைச் சேர்ந்த எவருக்கும் பத்ம விபூஷண், பத்ம பூஷண் விருதுகள் கிடைக்கவில்லை.

பத்மஸ்ரீ விருது பெறும் தமிழகத்தைச் சேர்ந்த இதர பிரபலங்கள் டேபள் டென்னிஸ் வீரர் சரத் கமல், திருநங்கை நர்த்தகி நடராஜ் , ஆர்.வி.ரமணி இசையமைப்பாளர் ஆனந்தன் சிவமணி மற்றும் ராமசாமி வெங்கடசாமி ஆகியோராவர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker