Latestமலேசியா

வாக்களிப்பு மைய வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார் மனோகரன்!

கேமரன்மலை,ஜன.26- கட்சி சின்னம் இருந்த சட்டையை அணிந்து வந்த பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் எம்.மனோகரன் வாக்களிப்பு மையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

வாக்களிப்பு மையங்களில் கட்சியை பிரதிபலிக்கும் சின்னங்களைப் பயன்படுத்துதல் தேர்தல் சட்டத்திற்கு புறம்பானது என்று தேர்தல் ஆணையத் தலைவர் அஸார் அஸிஸான் ஹருண் தெரிவித்தார்.

எனவே, மனோகரனை உடனடியாக வாக்களிப்பு மையத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டதாக ரிங்லட் தமிழ்ப்பள்ளியில் திறக்கப்பட்ட வாக்களிப்பு மையத்தை பார்வையிட வந்த அஸார் செய்தியாளர்களிடம் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker