Latestஉலகம்

பயங்கரவாதம்: சிங்கையை காக்கும் விழிப்புணர்வு அதிகரிப்பு! -சண்முகம்

சிங்கப்பூர், ஜன. 27- பொதுமக்களிடையே பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பான ‘எஸ்.ஜி.செக்யூர்’ பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதில் கடந்த ஈராண்டுகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சிங்கப்பூரின் உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தாக்குதலில் சிக்கிக் கொள்ள நேர்ந்தால் என்ன செய்வது? என்பது தங்களுக்குத் தெரியும் என்று அதிகமான சிங்கப்பூரியர்கள் நம்புவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

நான்கில் மூன்று சிங்கப்பூரியர்கள் எஸ்.ஜி.செக்யூர் குறித்து அறிந்துள்ளனர் என்றும் உதவிக்கு முன்வரும் வகையில் மக்களை தயார்படுத்த இன்னும் அதிகமான நடிவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் சண்முகம் சொன்னார்.

விழிப்புணர்வு கொண்டிருப்பவர்களாக மட்டுமின்றி, செயலில் இறங்கவும் மக்களைக் கடப்பாடு கொண்டவர்களாக ஆக்குவதே நோக்கம் என்றார் அவர்.

பொதுமக்களிடையே பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் இவ்வாண்டில் அதிக அளவிளான சிங்கை பாதுகாப்பு நிகழ்ச்சிகள் கடைத் தொகுதிகளிலும் தனியார் கூட்டுரிமை வீடுகளிலும் நடத்தப்படவுள்ளன.

மருத்துவ உதவி தேவைப்பட்டால் அல்லது சிறிய அளவிலான தீ விபத்துகளின் போது உதவி தேவைப்பட்டால் அருகில் உள்ளவர்களை விழிப்பூட்ட சிங்கப்பூரியர்களுக்கு உதவும் மைரெஸ்-பாண்டர் கைபேசிச்செயலி, எஸ்.ஜி.செக்யூர் செயலியுடன் ஒருங்கிணைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker