Latestமலேசியா

மைபிபிபி கட்சிப் பதிவு: சங்கப் பதிவகமே முடிவு செய்யும்! -மொகிடின்

கோலாலம்பூர், ஜன. 27- மைபிபிபி கட்சியின் பதிவு ரத்தாகி இருப்பதன் தொடர்பாக அக்கட்சி செய்துள்ள மேல்முறையீடு மீது முடிவு எடுப்பது சங்கங்களின் பதிவகத்தைப் பொறுத்தது என்று உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ மொகிடின் யாசின் கூறினார்.

இது தொடர்பான முடிவை சங்கப் பதிவகத்திடமே விட்டு விடுகிறேன். மேல் முறையீடு செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில், அந்த முறையீட்டுக்கு போதுமான அடிப்படை இருக்குமேயானால், அதுபற்றி முடிவு செய்ய வேண்டியது சங்கப் பதிவகமே தவிர நானல்ல என்று டான்ஶ்ரீ மொகிடின் சொன்னார்.

மைபிபிபி கட்சிப் பதிவு ரத்தானது குறித்து தாம் செய்துள்ள மேல் முறையீட்டின் மீது சங்கப் பதிவகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டான்ஶ்ரீ கேவியஸ் விடுத்துள்ள அறிக்கை ஒன்றுக்கு பதிலளித்த போது மொகிடின் மேற்கண்டவாறு சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker