Latestமலேசியா

1-ஆம், 2-ஆம், 3-ஆம் வகுப்பில் பரிட்சை முறை மீண்டும் வராது!- துணையமைச்சர்

கூலாய், ஜன. 27- ஒன்றாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்புகளில் மாணவர்களுக்கு தேர்வு வைக்கும் முறை மீண்டும் கொண்டு வரப்பட மாட்டாது என்று துணைக் கல்வியமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.

இது மிகவும் பாகுபாடான ஒரு நடைமுறையைக் கொண்டதாக இருப்பதால் அந்த மதிப்பீட்டு முறையை மீண்டும் கொண்டுவர அமைச்சுக்கு திட்டமில்லை என்றார் அவர்.

ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரையில் தேர்வுகள் கிடையாது. இத்தகைய தேர்வு முறையால் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர், தேர்ச்சி பெறாத மாணவர் என்ற முத்திரையுடன் அவர்களை பிரித்துப் பார்க்கும் நிலை இருந்ததால் அது கைவிடப்பட்டது. மிகச் சிறிய வயதிலேயே குழந்தைகளிடையே அத்தகைய முத்திரை குத்தப்படுவது தேவையில்லை என்று அவர் சொன்னார்.

தேர்வுகள் நீக்கப்பட்டிருப்பது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களில் சில தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்பதைத் தாம் புரிந்து கொள்வதாகவும் எனினும் அமைச்சு எடுத்துள்ள இந்தப் புதிய முயற்சிக்கு ஆதரவு அளிக்கும் படியும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதனைக் குறைகூறுவோர் முதலில் பின்லாந்தின் கல்விமுறைக்ச் சற்று கவனிக்க வேண்டும். அவர்கள் இத்தகைய தேர்வு முறையைக் கைவிட்டு விட்ட பின்னர், இன்றைக்கு உலக அளவில் சிறந்த கல்வியை வழங்கும் நாடாக மாறியிருக்கிறது என்று துணையமைச்சர் தியோ நீ சிங் சுட்டிக்காட்டினார்.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker