Latestமலேசியா

உணவுக் கடையில் புகைப் பிடித்த 2 போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை! -(Video)

ஜொகூர் பாரு, ஜன. 28- உணவுக் கடைகளில் புகைப் பிடிக்க விதிக்கப்பட்டிருக்கும் தடையை மீறி புகைப் பிடித்ததாக கருதப்படும் இரு போலீஸ்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் துறை அறிவித்திருக்கிறது.

இரண்டு போலீஸ்காரர்கள் உணவுக்கடை ஒன்றில் புகைப்பிடிக்கும் காட்சியைக் கொண்ட காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி பரவலாகிக் கொண்டிருக்கும் நிலையில் போலீஸ் துறை மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுப்பதற்காக இவர்களை அடையாளம் காணும் படி சம்பந்தப்பட்ட துறைக்கு தாம் உத்தரவிட்டிருப்பதாக போலீஸ் படைத்தலைவர் டான்ஶ்ரீ ஃபுஸி ஹருண் தெரிவித்தார்.

ஏற்கெனவே அரசாங்கம் புகைப் பிடிப்பதற்கான தடையை அமல்படுத்தி இருக்கிறது. போலீஸ் படையைச் சேர்ந்த அனைவரும் இந்தத் தடையை முறையாக கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அந்த இரு போலீஸ்காரர்களின் இத்தகைய செயல், முற்றிலும் முறைகேடான ஒன்று என ஜொகூர் போலீஸ் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தின் போது அவர் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker