Latestஇந்தியா

‘எதுக்காக அரசியலுக்கே வந்தேன்?’ -கமல்ஹாசன்

சென்னை, ஜன. 28- தனது மனச்சாட்சி உறுத்தியதால் தான் அரசியலுக்கு வந்ததாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடலூர் மாவட்டம் நெய்வேலி, மந்தாக்குப்பம்,விருத்தாசலம் ஆகிய ஊர்களில் மக்கள் சந்திப்பு கூட்டடங்களின் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: ”என்னுடைய மனச்சாட்சி உறுத்தியதால் தான் நான் அரசியலுக்கு வந்தேன். அரசியல்வாதிகளை முதலாளிகளாக நினைத்து விட்டீர்கள்.

அவர்கள் முதலாளி இல்லை. நீங்கள் தான் முதலாளி. உங்களுடைய அதிகாரத்தை நீங்கள் கைப்பற்றியாக வேண்டும்.

எனக்கு கிடைத்த பணம், புகழ் அனைத்துக்கும் நீங்கள் தான் பங்காளிகள். கோடீஸ்வரர்கள். பெரும் நிறுவன முதலாளிகள் சரியாக வரி செலுத்தவில்லை. அவர்கள் கஜானாவை காலி செய்வதும் அதை நீங்கள் நிரப்புவதாக உள்ளது.

உங்களுக்கு இலவச சாப்பாடு போட்டு பிரயோசனம் இல்லை. ‘தடபுடலாக’ மீன் குழம்பு சாப்பாடு போட விரும்பவில்லை. தூண்டில் வாங்கித் தரவே விரும்புகிறேன். இவ்வாறு கமலஹசான் வலியுறுத்தினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker