Latestமலேசியா

ஜன.29-30-இல் மாபெரும் “TEC” வேலை வாய்ப்புச் சந்தை!- (video)

கோலாலம்பூர்,ஜன.28- பொறியியல் (Engineering), புவியியல் பூளோக அறிவியல் (Geoscience), தகவல் தொழில்நுட்பம் (Information Technology), வணிகம் (Business), பயன்பாட்டு அறிவியல் (Applied Sciences) ஆகிய துறையைச் சேர்ந்த மாணவர்களுக்காக மாணவர்களே ஏற்பாடு செய்திருக்கும் TEC எனப்படும் தொழில்நுட்ப, கல்வி, வேலை வாய்ப்புச் சந்தை
நாளையும் நாளை மறுநாளும் (ஜனவரி29-30) நடைபெறவுள்ளது.

சம்பந்தப்பட்ட திறமையான பட்டதாரிகள் உள்நாட்டில் மட்டுமில்லாது, பன்னாட்டு நிறுவனங்களிலும் வேலைக்கு விண்ணப்பிக்க இந்த TEC வேலை வாய்ப்புச் சந்தை ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என கருதப்படுகிறது.

2001-ஆம் ஆண்டு மாபெரும் அளவில் அறிமுகம் கண்ட TEC வேலை வாய்ப்புச் சந்தையில் ஒவ்வோராண்டும் சராசரியாக 70 பெரிய நிறுவனங்கள் தங்களின் முகப்பிடங்களைத் திறந்து வந்துள்ளதாகவும், ஏறத்தாழ 5,000 பேர் அதில் கலந்து கொண்டுள்ளதாகவும் தெரிகிறது.

அதிலும், 2014-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட TEC வேலை வாய்ப்புச் சந்தையை, தேலண்ட் கோர்ப் (Talent Corp) “மலேசியாவின் மிகப் பெரிய வேலை வாய்ப்புச் சந்தை” என்று அங்கீகரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், இவ்வாண்டின் TEC வேலை வாய்ப்புச் சந்தை நாளை தொடக்கம் 2 நாட்களுக்கு, பேராக், ஶ்ரீ இஸ்காண்டாரில் உள்ள பெட்ரோனாஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (UTP) காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரையில் நடைபெறவுள்ளது. இம்முறை இந்த வேலை வாய்ப்புச் சந்தைக்கு 6,000 பேர் வருகையளிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வேலை வாய்ப்புச் சந்தைக்கு வருவோர் கையுடன் தங்களின் தன்குறிப்பை (resume) கொண்டுவரக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சில நிறுவனங்கள் அங்கேயே நேர்முகத் தேர்வை நடத்தும். எனவே, வேலைக்கு விண்ணப்பிக்க வருவோர் தயாராக வருவது சிறப்பு என்று தெரிவிக்கப்படுகிறது.

TEC வேலை வாய்ப்புச் சந்தை குறித்து மேல் விவரங்கள் அறிவதற்கு tec.utp.edu.my என்ற அகப்பக்கத்தை வலம் வரலாம். அல்லது கீழ்கண்ட சமூகஊடக பக்கங்களின் வாயிலாக விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்:-

Facebook: tecutp
Instagram: @tecutp
Twitter: @tecutp

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker