Latestசினிமா

பத்மஶ்ரீ விருது: கன்னடர் பிரிவில் பிரபுதேவா! வலைத் தளவாசிகள் சர்ச்சை!

சென்னை, ஜன.28- தமிழ்த் திரையுலகில் ஏராளமான ரசிகர்களை கொண்ட நடிகர் பிரபுதேவாவுக்கு மத்திய அரசு கன்னடர் என்கிற பிரிவில் பத்மஸ்ரீவிருது வழங்கியுள்ளானது இது ரசிகர்களை மட்டுமின்றி பிரபலங்கள் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நடிகர் பிரபுதேவாவின் பூர்வீகம் மைசூர் என்பதால் அவரை கர்நாடகத்தைச் சேர்ந்தவரென பிரித்து மத்திய அரசு விருது அறிவித்துள்ளது. பத்மஸ்ரீ விருதுகள் பட்டியலில் பிரபுதேவாவின் பெயர் கர்நாடக பிரிவில் இருந்ததால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தனர்.

அதாவது தமிழகத்தைச் சேர்ந்த பிரபுதேவாவுக்கு ஏன் கர்நாடகப் பிரிவில் விருது என பலர் சமூக வலைத்தளத்தில் தங்களுடைய கேள்வியை எழுப்பி வந்தனர்.

பிரபு தேவா கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்தவர் என்றாலும் இவர் சிறுவயதில் இருக்கும் போதே இவருடைய பெற்றோர் சென்னைக்கு குடி பெயர்ந்து விட்டனர். இதனால் இவரை பெரும்பாலோனர் தமிழர் என்றே கருதி வருகின்றனர்.

மேலும் பிரபுதேவா இதுவரை ஒரு கன்னட படத்தில் கூட பணியாற்றியது இல்லை. தமிழில் மட்டுமே அதிகப்படியான படங்களில் நாயகனாக- நடன இயக்குனராக பணியாற்றி உள்ளார்.

இதனால் இவருக்கு தமிழகத்தில் தான் ரசிகர்கள் அதிகம். அதேபோல் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்களை இயக்கியுள்ளார்.

ஆனால் இவருக்கு கன்னடர் என்கிற பிரிவில் பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்ததும் அல்லாமல் ஏமாற்றத்தையும் கொடுத்தது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker