Latestமலேசியா

பாரா நீச்சல் போட்டி: மலேசியாவிடமிருந்து பறிப்பு!

கோலாலம்பூர், ஜன. 28- 2019 ஆம் ஆண்டின் உலக பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியை ஏற்று நடத்தும் உரிமையை மலேசியாவிடமிருந்து பறித்து விட்டதாக அனைத்துலக பாராலிம்பிக் மன்றம் அறிவித்துள்ளது.

மலேசியா ஏற்று நடத்தவிருந்த இந்தப் போட்டியில் இஸ்ரேல் பங்கேற்க மலேசிய அரசு தடை விதித்துள்ளதால் போட்டியை நடத்தும் உரிமை பறிக்கப்படுவதாக அது தெரிவித்தது.

ஜூலை 29 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்டு 4ஆம் தேதி வரை சரவா, கூச்சிங்கில் இந்தப் போட்டி இடம்பெறவிருந்தது. இதே காலக்கட்டத்தில் இந்தப் போட்டியை வேறொரு நாட்டில் நடத்துவதற்கான முயற்சியில் தாங்கள் ஈடுபட்டிருப்பதாக அனைத்துலக பாராலிம்பிக் மன்றம் தெரிவித்தது.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker