Latestவிளையாட்டு

மலாக்காவில் உலகக் கபடி போட்டி: 40 நாடுகள் களம் இறங்குகின்றன! -(Video)

மலாக்கா, ஜன 28- உலக அளவில் மலாக்காவை நோக்கி கபடி வீரர்கள்- வீராங்கனைகள் படையெடுக்க உள்ளனர்.மொத்தம் 52 தேசிய கபடிக் குழுக்கள் பங்கேற்கும் அனைத்துலகக் கபடிப் போட்டி மலாக்கா நகரில் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.

‘மலாக்காவுக்கு வருகை தாருங்கள்’ என்ற 2019-இன் சுற்றுலா ஆண்டை முன்னிட்டும் யுனொஸ்கோவின் பாரம் பரியத் தளமாக மலாக்கா பிரகடனம் செய்யப் பட்டிருப்பதை கொண்டாடும் விதமாகவும் மலேசிய கபடி சம்மேளனம், இந்த அனைத்துலகப் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

32 ஆண்கள் குழுக்கள், 24 பெண்கள் குழுக்கள் பங்கேற்கும் இந்தப் போட்டியை முன்னிட்டு 40க்கும் அதிகமான நாடுகளில் இருந்து 1000க்கும் மேற்பட்ட கபடி வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் அதிகாரிகள் மலாக்காவுக்கு படையெடுக்க உள்ளனர்.

இந்தியாவில் தோன்றிய கபடி விளையாட்டு, தொண்மைய காலப் போர் யுக்திகளின் வடிவமாகக் கருதப்படுகிறது. எனினும், அண்மையில் கபடி விளையாட்டு உலக அளவில் புது எழுச்சியைப் பெற்றுள்ளது. தற்போது உலகக் கபடி சம்மேளனத்தில் 50-க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கம் பெற்றுள்ளன.

ஆசியாவில் கபடி பிரபலமடைந்து இருக்கும் நிலையில் அதற்கு இணையாக உலக அளவிலும் பிரபலமடைந்து வருகிறது என்பதற்காக அண்மைய கால அனைத்துலகப் போட்டிகள் சான்றாக அமைந்திருக்கின்றன.

நியூசிலாந்து, சுமோவா, மெக்சிகோ, அர்ஜெண்டினா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து டென்மார்க், போலந்து, மோரிசியஸ், கென்யா, எகிப்து, பிலிப்பைன்ஸ், ஈராக், தைவான், தென் கொரியா, ஈரான், ஹாங்காங் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து அவற்றின் தேசிய கபடி குழுக்கள் மலாக்கா அனைத்துலக கபடிப் போட்டியில் பங்கேற்கின்றன.

போட்டியை ஏற்று நடத்தும் நாடான மலேசியாவும் வலுவான கபடி குழுவை களத்தின் இறக்கி விடுவதற்கு தயாராகி வருகிறது. இப்போட்டிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அண்மையில் மலாக்கா ஆளுனர் டான்ஶ்ரீ கலில் யாக்கோப் வெளியிட்டார்.

ஏப்ரில் நடக்கும் இந்தப் போட்டியில் எந்தெந்த நாடுகள், யார் யாருடன் மோதுகின்றன என்பதற்கான தேர்வுக் குலுக்கு எதிர்வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி நடைபெறும் என்று உலக கபடி சமேளனத்தின் அறிக்கை தெரிவித்தது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker