Latestமலேசியா

விவேகானந்தா ஆசிரமப் பெயரில் பிஜே விவேகானந்தா தமிழ்ப்பள்ளியின் நிலமா?

கோலாலம்பூர்,ஜன.28- கோலாலம்பூர் விவேகானந்தா ஆசிரமத்தின் பெயரில் உள்ள பெட்டாலிங் ஜெயா விவேகானந்தா தமிழ்ப்பள்ளியின் நிலத்தை பள்ளி வாரியத்திடம் ஒப்படைக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கத் தொடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, 2012-ஆம் ஆண்டில் அந்தப் பள்ளியின் மேம்பாட்டுக்காக அரசாங்கம் வழங்கியதாக கூறப்படும் 60 லட்சம் ரிங்கிட்டில் ஒரு பகுதியையும் பள்ளியிடம் ஒப்படைக்குமாறு பள்ளி வாரியத்தினர் அந்த வழக்கில் கோரியுள்ளனர்.

இந்த வழக்கு, ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் பிரதிவாதியாக விவேகானந்தா ஆசிரமம், அவர்களுக்கு உடந்தையாக இருந்த பெட்டாலிங் ஜெயா தமிழ்ப்பள்ளியின் முன்னாள் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள், நில உரிமத்தை பெயர் மாற்றம் செய்த நில உரிம பதிவதிகாரி ஆகியோர் அடங்குவர் என பள்ளி வாரியத் தலைவர் டாக்டர் செ. செல்வம் தெரிவித்தார்.

விவேகானந்தா தமிழ்ப்பள்ளியின் வாரியம் 2016-ஆம் ஆண்டில் தான் தோற்றுவிக்கப்பட்டது. பள்ளியின் நில உரிமம் பள்ளியின் பெயரிலேயே 50 ஆண்டு காலமாக அதாவது 1959-லிருந்து 2009-ஆம் ஆண்டு வரை இருந்ததாக தெரிகிறது.

எனினும், அந்த உரிமம், 2012-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16-ஆம் தேதி ஒரேயொரு ரிங்கிட்டிற்கு கோலாலம்பூர் விவேகானந்தா ஆசிரமத்தின் பெயரில் மாற்றப்பட்டிருக்கிறது. இதற்கு உடந்தையாக முன்னாள் பெற்றோர் ஆசிரியர் சங்க செயலவை உறுப்பினர்கள் மூவர் கையொப்பம் இட்டுள்ளனர். மேலும், பள்ளிக்கு கல்வி அமைச்சு வழங்கிய 60 லட்சம் ரிங்கிட்டி எதையும் விவேகானந்தா ஆசிரமம் பள்ளிக்காக பயன்படுத்தவில்லை என பள்ளி வாரியம் குற்றம் சாட்டியுள்ளது.

பள்ளியை மேம்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ள சம்பந்தப்பட்ட பள்ளி வாரியம் எதையும் நில உரிமம் இல்லாமல் செய்ய முடியாது என்கிறது. அதன் காரணமாகவே விவேகானந்தா ஆசிரம் மீது இந்த வழக்கைத் தொடுக்க நேர்ந்ததாக பள்ளி வாரியத்தின் துணைத் தலைவரான இரா.ஜெகா விவரித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker