Latestமலேசியா

அரசு ஊழியர்களின் ஊழலை தடுக்க 5 ஆண்டுத் திட்டம்!

புத்ராஜெயா, ஜன.29- பொதுச் சேவை துறையில் வேலை செய்து வரும் அரசாங்க ஊழியர்கள், தொடர்ந்து ஊழல்களில் ஈடுபட்டு வருவதை நிறுத்தும் வகையில், ஊழலை முழுமையாக அகற்றும் ஐந்தாண்டு காலத் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப் படுத்தியது.

“பொதுச் சேவை ஊழியர்கள் மத்தியில் நிலவும் ஊழல்களை துடைத்தொழிப்பதற்காக அரசாங்கம் முதன் முறையாக ஊழலை எதிர்க்கும் விரிவான திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது. இது நாட்டிற்கு மிக முக்கியமான நாள்” என்று பிரதமர் துன் மகாதீர் முகமட் கூறினார்.

நாட்டில் ஊழல் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முந்தைய அரசாங்கம் ‘தேசிய நேர்மை திட்டத்தை’ அறிமுகப் படுத்தி, அந்தத் திட்டம் தோல்வி அடைந்தது என்று குறிப்பிட்ட மகாதீர், பக்காத்தான் ஹராப்பானின் தேசிய ஊழல் எதிர்ப்பு திட்டம், ஐந்து ஆண்டுகளுக்குள் தனது இலக்கை அடையும் என்று தாம் பெரிதும் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

அரசு கொள்முதல், சட்ட அமலாக்கம், பொதுத் துறை நிர்வாகம் மற்றும் நீதித் துறைகளில், ஊழல்கள் அறவே நிகழக் கூடாது என்ற அடிப்படையில், இந்த ஊழல் எதிர்ப்பு திட்டம் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஊழல்களை தகர்த்தெறிய, 22 வியூகங்கள் மற்றும் 115 முனைப்புகள், அத்திட்டத்தின் கீழ் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. அரசியல் நிதி மீதான திட்ட வரைவு, மற்றும் தேசிய தணிக்கை திணைக்களம் ஆகியவை, நாடாளுமன்றத்தின் கீழ் செயல்பட வேண்டும் என்றும் என்.ஏ.சி.பி எனப்படும் தேசிய ஊழல் எதிர்ப்பு திட்டம் பரிந்துரைத்துள்ளது.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker