Latestசினிமா

அரைகுறை ஆடையில் பொது இடத்திலா? ராகுல் பிரித்தியை ‘வறுக்கும்’ வலைவாசிகள்!

ஐதராபாத், ஜன.29- தமிழில் சில படங்களில் நடித்திருக்கும் ராகுல் பிரித்தி சிங்,தெலுங்கில் முன்னணி கதநாயகிகளில் ஒருவர், அண்மையில் மேல் சட்டை மட்டும் அணிந்தபடி இடுப்புக்குக் கீழ் மிகக் குட்டையான சிலுவாரும் அணிந்து  பொது இடத்திற்கு வந்திருந்தார்.

காரிலிருந்து இறங்கியவரை அந்த கோலத்தோடு படம் எடுத்து டுவிட்டரில் பதிவிட்டிருந்தார் ஓர் இளைஞர்.இதைக் கண்டு கடுப்பான ராகுல் பிரித்தி,  சம்பந்தப்பட்ட இளைஞரின் அம்மாவையும் சேர்த்து திட்டித் தீர்த்துவிட்டார்

. அவ்வளவு தான்.. இதையே சாக்காக வைத்து சமூக ஊடகங்களில் இருதரப்பிலும் கடந்த இரண்டு நாட்களாக ‘மென்று’ துப்பத் தொடங்கி விட்டனர்.

வலைத்தள வாசிகள் ராகுல் பிரித்தியை வறுத்தெடுத்து வருகின்றனர். அதே வேளையில் மாதர் அமைப்புகள் படம் பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட்ட இளைஞரை தாறுமாறாகத் தாக்கத் தொடங்கிவிட்டனர்.

பொது இடங்களுக்கு வரும் போது கண்ணியத்தோடு ஆடை அணியாத ராகுல் பிரித்தியை விட்டு விட்டு அந்த இளைஞருக்கு எதிராக குரல் கொடுப்பது ஏன் என்று மாதர் அமைப்புகளை பலர் வெளுத்தெடுத்து வருகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker