Latestமலேசியா

சம்மன் கட்டுவதில், சலுகைகளை அகற்ற அமைச்சு முயற்சி!

சிப்பாங், ஜன.29- சாலை போக்குவரத்துக் குற்ற அபராத சம்மன்களுக்கு சலுகை தள்ளுபடி வழங்கும் முறையை நிறுத்துவதற்கு போலீஸ் மற்றும் ஊராட்சித் துறையுடன் போக்குவரத்து அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறது.

தற்போது சாலை போக்குவரத்து இலாகா, அத்தகைய கட்டணச் சலுகைகள் வழங்குவதை நிறுத்தி விட்டது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.

இதேபோன்ற கொள்கையையும் நிலைப்பாட்டையும் போலீசாரும் ஊராட்சித் துறையும் கடைபிடிக்க வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சு கேட்டுக் கொள்ளவிருப்பதாக அவர் சொன்னார்.

சாலை விபத்துக்களைக் குறைக்கும் நோக்கில், சாலையைப் பயன்படுத்துவோர் அதன் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற பய உணர்வை அவர்கள் மனதில் விதைக்க சம்மன்களுக்கு சலுகைக் கட்டணம் அளிப்பது நிறுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker