Latestமலேசியா

சித்ரவதை: 9 மாதக் குழந்தை மரணம்!- (video)

ஈப்போ,ஜன.29- குழந்தை பராமரிப்பாளர்களின் கொடுமைக்கு இலக்காகி குழந்தைகள் மரணமடையும் வேதனைக்குரிய சம்பவங்கள் அண்மைய காலமாக அதிகரித்து காணப்படுகிறது.

அந்த வரிசையில், 9 மாத ஆண் குழந்தை ஒன்று பராமரிப்பாளரின் சித்ரவதை கொடுமைக்கு உள்ளாகி பரிதாபமாக உயிரிழந்த துயரச் சம்பவம் பேராக், மஞ்சோங்கில் நிகழ்ந்துள்ளது.

மஞ்சோங் மாவட்ட போலீஸ்காரர் ஒருவரின் மனைவிதான் பிராஸ் டேனியல் முகமட் நிஸார் என்ற அக்குழந்தையை பராமரித்து வந்திருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை, குழந்தையின் உடலில் அசைவில்லை என்று சம்பந்தப்பட்ட பராமரிப்பாளர் குழந்தையின் தாயார் நூர் அஸிமாவுக்கு தகவல் தெரிவிக்க-, அவர் பதறியடித்துக் கொண்டு அந்த பராமரிப்பாளர் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.

குழந்தை சுயநினைவின்றி கிடந்ததைப் பார்ந்து அதிர்ச்சிக்குள்ளான நூர் அஸிமா, குழந்தையை ஶ்ரீ மஞ்சோங் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார். குழந்தையின் மூளையில் ரத்தக் கசிவு மோசமாக இருந்ததால் குழந்தை உடனடியாக ஈப்போ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.

அந்த குழந்தையின் இருதயத் துடிப்பு மெல்ல மெல்ல குறைந்து கடைசியில் 4 நாட்களாக உயிருக்கு போராடிய பின் சிகிச்சை பலனளின்றி குழந்தை நேற்று பிற்பகல் 2.40 மணியளவில் உயிரிழந்தது.

இதனிடையே, அந்த குழந்தையின் சவப் பரிசோதனை அறிக்கையை ஈப்போ மருத்துவமனை வெளியிட்டுள்ளது. குழந்தை சித்ரவதைக்கு ஆளாகி உயிரிழக்கவில்லை. மாறாக, குழந்தையின் மூளையில் ஏற்கெனவே ரத்தக் கட்டு இருந்திருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker